தினகரன் 26.11.2010
கோவையில் பயன்படுத்திய காண்டம், நாப்கின்களால் சாக்கடை அடைப்பு பிரச்னை விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி முடிவு
கோவை, நவ. 26: பயன்படுத்தப்பட்ட காண்டம், நாப்கின்களை சாக்கடையில் வீசுவதால் அவை அடைத்து கொள்கின்றன. இதை தவிர் க்க கோரி கோவை மாநகராட்சி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் பாதாளச்சாக்கடை அடிக்கடி அடைத்து கொள்கிறது. அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், ஓட்டல், வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் காண்டம், சானிட்டரி நாப்கின், யூஸ் அண்ட் த்ரோ ரேசர் அதிகளவு கிடந்தன. அரசு கலைக்கல்லூரி ரோடு, ஸ்டேட் பாங்க் ரோட்டில் ஒருமுறை சாக் கடையை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, 400க்கும் மேற்பட்ட சானிட்டரி நாப்கின், 500க்கும் மேற்பட்ட காண்டம்கள் கிடந்தன. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாதாளச்சாக்கடையில் உணவுக்கழிவு, பீடி, சிகரெட் பாக் கெட், முடிக்கற்றை, காண்டம், நாப்கின் உள்ளிட்ட பொருள்களை போடக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ், கழிவறைகளில் ஒட்ட உத்தரவிடப்பட் டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களே, வீடு, ஓட்டல், மருத்துவமனைகளுக்கு சென்று, நோட்டீஸ் ஓட்டுவார்கள். பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் உட்பட பல்வேறு பொது இடங்களிலும் இவை ஒட்டப்படும். வீடு, ஓட்டல், மருத்துவமனைகளுக்கு தனித்தனி நோட்டீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. காண்டம், நாப் கினை சாக்கடையில் போட் டால் கட்டாயம் சாக்கடையில் அடைப்பு ஏற்படும்,” என்றார்.