தினத்தந்தி 02.07.2013
கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேயர் திடீர் ஆய்வு
கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.50 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும்
பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர்
செ.ம.வேலுசாமி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை சென்றார். அவர் அங்கு
நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர்
செ.ம.வேலுசாமி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை சென்றார். அவர் அங்கு
நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், கட்டிட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முடித்து
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத
பரிசோதனை அறை ரோட்டுக்கு அருகில் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து
பாதிக்கப்படுகிறது. அதற்கு மாற்று இடம் தேர்வு செய்து ஆம்புலன்ஸ் எவ்வித
இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் இடத்தை தேர்வு செய்யுமாறும்
மருத்துவமனை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ., ஆஸ்பத்திரி டீன் டாக்டர் விமலா,
மண்டல தலைவர்கள் ஆதிநாரயணன், ராஜ்குமார், ஜெயராமன். நிதிக்குழு தலைவர்
பிரபாகரன், நியமன குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் டாக்டர்கள் உடன்
இருந்தனர்.