தினத்தந்தி 26.09.2013
கோவை குறிச்சி குளத்தில் கட்டிட கழிவுகளை கொட்டிய லாரி பறிமுதல்

கோவை மாநகராட்சி பகுதியில் கட்டிட இடிமான கழிவுகளை கொட்ட இடங்கள்
அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்களை தவிர வேறு எங்காவது கொட்டினால்
சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்களை தவிர வேறு எங்காவது கொட்டினால்
சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று இரவில் குறிச்சி குளத்தில் கட்டிட கழிவுகள் லாரி
மூலம் கொட்டப் படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று, கட்டிட கழிவுகளை
கொட்டிய அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
அந்த லாரியின் உரிமையாளர் மற்றும் அங்கு கட்டிட கழிவுகளை ஏற்றி வந்தவர்
யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.