தினத்தந்தி 09.11.2013
கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி

கோவை
மாநகராட்சி ராம்நகர், ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டி நடந்தது. இதை மேயர் செ.ம.வேலுசாமி
தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, மாணவ–மாணவிகளின் விளையாட்டு
திறமைகளை வெளிகாட்டுவதற்கு விளையாட்டு போட்டிகள் நடத்த முதல்–அமைச்சர்
உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 12–ம்
வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகள் பல்வேறு பிரிவு விளையாட்டு
போட்டிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில்
வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சுழற்கோப்பை வழங்கப்படுகிறது
என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் க.லதா, துணை கமிஷனர் சு.சிவராசு.
கல்வி அலுவலர் வசந்தா, மத்திய மண்டலத்தலைவர் கே.ஏ.ஆதிநாராயணன், கல்வி
குழுத்தலைவர் சாந்தாமணி, நியமனகுழு உறுப்பினர் ராஜேந்திரன், கவுன்சிலர்
ஆடிட்டர் சீத்தாராமன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர்.