தினமணி 28.07.2010
சங்ககிரி பேரூராட்சி சாதாரணக் கூட்டம்
சங்ககிரி, ஜூலை 27: சங்ககிரி பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம், மன்ற கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் டி.என்.அத்தியண்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வேதமணி, துணைத் தலைவர் சண்முகம் மற்றும் கவுன்சிலர்கள் இதில் கலந்து கொண்டனர். பொது நிதியிலிருந்து ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் 2-வது வார்டு முனியப்பம்பாளையம் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குழாய் மூலம் வழங்குதல், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் ஆண்டு முழுவதும் குடிநீர் எடுப்பதற்காக மின் மோட்டார் அறை வரை பிரதான குழாய்களை நீட்டிப்பு செய்யும் பணியுடன் 60 குதிரை திறன் சக்தி கொண்ட மின் மோட்டார் மற்றும் டர்பன் பம்பு பழுது ஏற்பட்டுள்ளதை சரி செய்தல் பணிகளுக்காக பொது நிதியிலிருந்து மேற்கொள்தல் உள்ளிட்ட 18 திட்டங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.