சங்கனூர் பள்ளம் பாலம் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
கோவை: கோவை சங்கனூர் பள்ளத்தில் கட்டப்பட்டு வரும் பாலம் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் லதா கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை மாநகராட்சி கமிஷனராக லதா கடந்த 4ம்தேதி பொறுப்பேற்றார். அதன்பிறகு, நேற்று முதல்முறையாக மாநகர் முழு வதும் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.
புரூக்பாண்ட் ரோடு சீத்தாலட்சுமி மகப் பேறு மருத்துவமனையை ஆய்வுசெய்த அவர், கர்ப்பிணிகளுக்கு சரியான முறை யில் மருத்துவம் அளிக்கப்படுகிறதா, உணவுப்பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா, தங்குவதற்கு வச திகள் போதுமான அளவு உள்ளதா என்பது பற்றி கேட்டறிந்தார். மருத்துவமனை அருகே சாலை யோரம் விபத்து ஏற்படுத் தும் வகையில் இருந்த மண் குவியலை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
69வது வார்டு புலியகுளம் ரோடு, பெரியார் நகர், பாலசுப்பிரமணியம் நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பெரியார் நகரில் 3 குடிநீர் குழாய் சுத் தம் செய்யாமல் இருப்பதை அறிந்து அவற்றை உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார். தெருவோர குடிநீர் குழாய்களை முறை யாக பராமரிக்க உத்தரவிட்டார்.
65வது வார்டு கல்லறை முதல் தெரு, பாரதிபுரம் சர்ச் வீதி ஆகிய பகுதிகளில் நடந்த சிறப்பு தூய்மை பணியை பார்வையிட்டார். தெருவோர குப்பைகளை அகற்றுதல், மழைநீர் வடி கால் தூர் வாரும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிட்டார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கட்டடம் பயனற்று கிடப்பதை பார்வையிட்டார். அதை, புனரமைக்கவும் உத்தரவிட்டார்.
சங்கனூர் பள்ளம் 48வது வார்டில் ரூ.64.50 லட்சம் மதிப்பீட்டில், ரத்தினபுரியையும், காந்திபுரம் 5வது வீதியையும் இணைக் கும் பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தினமும் தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோக பணியை 100 சதவீதம் நிறைவேற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். சாக்கடை கால்வாய் தூர் வாரும் போது துப்புரவு பணியாளர்கள் கண்டிப்பாக கையுறை, காலுறை அணியவேண்டும் என வலியுறுத்தினார்.
கவுண்டம்பாளையத்தில் சிறுவாணி-பில்லூர் குடிநீர் குழாய் இணைப்பு பணியை பார்வையிட்டார். இப்பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொண் டார். சாயிபாபாகாலனி யில் உள்ள தமிழ்நாடு நகரி யல் பயிற்சி மைய தங்கும் விடுதி மேம்பாட்டு பணி களை பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் கருணாகரன், கண்காணிப்பு பொறியாளர் கணேஷ்வரன், நிர்வாக பொறியாளர்கள் சுகுமார், லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் ஞானவேல், உதவி பொறியாளர் கருப்புசாமி மற்றும் அலுவலர் கள் உடனிருந்தனர்.