தினமணி 19.11.2009
சங்கரன்கோவிலில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பு
சங்கரன்கோவில், நவ 18:÷சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து நகர்மன்றத் தலைவர் பார்வதிசங்கர் தலைமையில் வழங்கப்பட்டது.
÷சுகாதார அலுவலர் குருசாமி முன்னிலை வகித்தார். நகராட்சிப் பகுதியில் உள்ள 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ÷
ஆத்தியடிபிள்ளையார் கோயில் அருகேயுள்ள அகதிகள் முகாம்,உழவர் சந்தையில் உள்ள அகதிகள் முகாம் ஆகியவற்றில் உள்ள 63 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை நகர்மன்றத் தலைவர் பார்வதிசங்கர் வழங்கினார்.
÷ஏற்பாடுகளை நகராட்சித் துப்புரவு ஆய்வாளர்கள் ஜெயபால்மூர்த்தி, பாலச்சந்தர், வெங்கட்ராமன், சக்திவேல், மகப்பேறு உதவியாளர் இந்திராகாந்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.