தினகரன் 23.07.2010
சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சி வார்டு இடைத்தேர்தல்
சங்கரன்கோவில், ஜூலை 23:சங்கரன்கோவில் தாலுகாவில் மட்டும் 4 இடங்களில் தேர்தல் நடந்தது. சங்கரன்கோவில் நகராட்சி 5வது வார்டுக்கு திமுகவைச்சேர்ந்த பலவேசம், மார்க்சிஸ்ட் ரத்தினவேல் ஆகியோர் போட்டியிட்டனர். லட்சுமியாபுரம் கோமதி ஆரம்பபாடசாலை வாக்குசாவடி யில் வாக்காளர்கள் வாக்களித்தனர். இங்கு மொத்தமுள்ள 1142 வாக்குகளில் 913 வாக்குகள் பதிவானது. இது 79.94 சதவீதம்.சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் பஞ்சாயத்து என்ஜிஓ காலனி 4வது வார்டில் முருகேசன், பரமசிவன், செந் தில் ஆகியோர் போட்டி யிட்டனர். இங்கு 2 வாக்கு சாவடிகள் அமைக்கப் பட்டிருந் தன. இங்கு மொத்தமுள்ள 1461 வாக்குகளில் 628 பதி வானது. இது 43 சதவீதம் ஆகும்.
குருவிகுளம் யூனியன் சத்திரப்பட்டி பஞ்சாயத்து தலைவிக்கு பூரணம், கனக லட்சுமி ஆகியோர் போட்டி யிட்டனர். இங்கு மொத்தமுள்ள 1186 வாக்குகளில் 888 பதிவானது. இது 80 சதவீதம். வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு குருவிகுளம் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புளியங்குடி:புளியங்குடி
காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியில் 25வது வார்டுக்கான தேர்தல் நடந்தது. முஸ்லீம்லீக் சார்பில் அப்துல்ரகுமான், அசைந்தாடும் நாற்காலி சின்னத்திலும், சுயேட்சை வேட்பாளர்களான அப்துல்அஜித் சிலிண்டர் சின்னத்திலும், திவான் மைதீன் ஸ்பேனர் சின்னத்திலும், முகம்மது யூசுப் மத்தளம் சின்னத்திலும் போட்டியிட்டனர். காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் வாக்களித்தனர்.மொத்தமுள்ள 944 வாக்குகளில் 668 பதிவானது. இது 70.5 சதவீதம் ஆகும். பின்னர் தேர் தல் அலுவலர் செந்தில்முருகன் வாக்கு பெட்டிகள் சீல் வைத்து நக ராட்சி அறையில் வைத்தார்.
துரைசாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இந்திரன், கணேஷ்குமார், சீனி பாண்டி, மல்லிகா, முனியம்மாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 6 வாக்குசாவடி களில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 2449 வாக்கு களில் 1399 வாக்குகள் பதி வானது. இது 57 சதவீத மாகும்.
கோட்டையூர் பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினருக்கு கோபிநாத், சர வணன், தங்க மலை, வளர்மதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் கோட்டையூர் அரசு உதவிபெறும் பள்ளியில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 517 வாக்குகளில் 275 பதிவானது. இது 53 சதவீதம் ஆகும்.
பணகுடி:
பணகுடி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 14வது வார்டுக் கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இதில் திமுக சார்பில் ராஜா, சுயேட்சையாக குமார் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரியாக ஆறுமுகம் செயல்பட்டார். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடந்தது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மொத்தமுள்ள 1773 வாக்குகளில் 1225 பதி வானது. 69 சதவீத வாக்கு பதிவானது. பணகுடி இன்ஸ்பெக்டர் சிவ்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி ஊராட்சி ஒன்றியம் காசிமேஜர் புரம் ஊராட்சிமன்ற தலை வராக பொறுப்பு வகித்த தங்கையா விபத்தில் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து காலியாக உள்ள ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் இசக்கிமுத்து, முருகன், ரெங்க சாமி, குமார், தங்கம் ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டனர். மொத்த வாக்குகள் ஆயிரத்து 890 ஆகும். இதில் ஆயிரத்து 143 வாக்குகள் பதிவாகின. இது 60 சதவீத வாக்குப்பதிவு ஆகும். தேர்தல் அதிகாரியாக தென்காசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முத்துசாமி செயல்பட்டார்.