தினத்தந்தி 12.12.2013
சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்தியமங்கலம்
நகராட்சிக்கு உள்பட்ட வடக்குப்பேட்டை, சத்யா ரோடு, கோட்டணக்காரவீதி,
நிர்மலா தியேட்டர்ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்துக்கு
இடையூறாக காணப்பட்டது. இதனால் அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக்
கொள்ளுமாறு சத்தி நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி அனைவருக்கும் வேண்டுகோள்
விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை
அகற்றிக் கொண்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்த பகுதிகளுக்கு
சத்தி நகரமைப்பு ஆய்வாளர் பி.செல்வம், துப்புரவு அதிகாரி சக்திவேல்
ஆகியோர், நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் நேரில் சென்று போலீசார்
உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம்
பரபரப்பு நிலவியது.