தினமணி 17.02.2010
சாலைப் பணி: ஆக்கிரமிப்புகள் இடிப்பு
தஞ்சாவூர், பிப். 16: பட்டுக்கோட்டை நகருக்கான புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் புறவழிச்சாலை தொடங்கி மதுக்கூர் – முத்துக்கோட்டை சாலைகள் மற்றும் கடற்கரைச் சாலை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
இந்தச் சாலை வழியில் அரசுப் புறம்போக்கு நிலம் சுமார் 3 ஏக்கரில் உள்ளது. இதை சில தனிநபர்கள் ஆக்கிரமித்து, சாகுபடி செய்திருந்த 65 தென்னை மரங்கள் அகற்றப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் (பொ) மு. கருணாகரன் ஆலோசனையின்படி பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் மெய்யழகன் மற்றும் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொண்டனர்