தினமணி 27.07.2010
சாலையோர ஆக்கிரமிப்புகள் நீக்கம்
உளுந்தூர்பேட்டை, ஜூலை 26: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் நீக்கி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட விருத்தாசலம் சாலை, திருவெண்ணெய்நல்லூர் சாலை, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, சேலம் சாலை ஆகியவற்றில் சாலையோர ஆக்கிரமிப்புகளை கடந்த ஒரு வாரமாக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பி.பரந்தாமன் தலைமையில் பொறியாளர் கவிதா, சாலை ஆய்வாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் காவல்துறை உதவியுடன் கடந்த ஒரு வாரமாக நீக்கி வருகின்றனர்.