தினமலர் 09.04.2010
சாலையோர பூங்கா அமைக்க திட்டம்
திருப்பூர்: சாயப்பட்டறைகளை கண்காணிப்பதற்காக, மாசு கட்டுப்பாடு வாரியம், வருவாய்த்துறை, மின்வாரியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் சமயமூர்த்தி லைமை வகித்தார். கூட்டத்தில், ‘நகரில் செயல்படும் சாயப்பட்டறைகள் வெளியிடும் திட கழிவுகளை அகற்றுவது, சாய கழிவு நீர், நீர் நிலைகளில் கலக்காமல் இருப்பதை தடுப்பது; வாகனங்களின் எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. நெரிசலை குறைக்க சாலைகளை விரிவுபடுத்துவது.
‘இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் மின்கம்பங்களை அகற்றுவது; அகற்றப்பட்ட இடத்தில் சாலையோர பூங்காக்கள் அமைப்பது; முக்கிய சாலைகள் பாலங்கள் அருகே கோழி, மீன் கழிவுகளை கொட்டுவதை தடுப்பது; கழிவுகளை மாநகராட்சி மூலம் சேகரித்து தரம் பிரித்து அப்புறப்படுத்துவது‘ என முடிவு செய்யப்பட்டது. டி.ஆர்.ஓ., முரளிதரன், மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி, பொறியாளர் கவுதமன், மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் கண்ணன், நகர் நல அலுவலர் ஜவஹர்லால் பங்கேற்றனர்.