தினகரன் 03.05.2013
சாலை அழகுபடுத்தும் திட்டம் தொடக்கம்
சென்னை: மாநகராட்சி மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கூட்டமைப்பு இடையே மாநகர சாலைகளை அழகுபடுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதன் படி சாலை அழகுபடுத்தும் திட்ட தொடக்கவிழா, ஈ.வி.கே.சம்பத் சாலையில் நேற்று நடந்தது. மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.
கூட்டமைப்பின் தலைவர் சந்தீப் மேத்தா, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் பங்கேற்றனர்.
ஈ.வி.கே.சம்பத் சாலை, ஜோதி வெங்கடாசலம் சாலை, வேப்பேரி ஹைரோடு, ராஜா முத்தையா சாலை, கங்காதீஸ்வரர் கோயில் தெரு, காந்தி இர்வின் சாலை, புரசைவாக்கம் ஹைரோடு, ராஜா அண்ணாமலை ரோடு, நாராயண குரு சாலை, போலீஸ் கமிஷனர் அலுவலக சாலை, பாந்தியன் சாலை, வானல்ஸ் ரோடு ஆகிய சாலைகளை கூட்டமைப்பு பராமரிக்கும்.