தினமலர் 27.07.2012
சாலை ஆக்கிரமிப்பு அகற்ற அறிவிப்பு
பெருந்துறை: பெருந்துறை நகரின் மையப்பகுதி வழியாக, சென்னை – கொச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
நெடுஞ்சாலையை பல இடங்களில் ஆக்கிரமித்து, கடைக்காரர்கள், கடையின் முன் பந்தல், கொட்டகை மற்றும் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். மேற்படி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடையின் முன் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பெருந்துறையில் போக்குவரத்து போலீஸார் இல்லாததால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் நிற்பதில்லை. அதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.சாலையை ஆக்கிரமித்துள்ள கடைக்காரர்களுக்கு, நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில் நோட்டீஸ் வழங்கியும், டவுன் பஞ்சாயத்து பணியாளர் மூலம், டாம்டாம் போட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறினர்.காலக்கெடுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால், நெடுஞ்சாலைத் துறையினர் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றுவர் எனவும், அதற்கான செலவு கடைக்காரரிடம் வசூலிக்கப்படும் என்றும், அகற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்ட