தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
சாலை சீரமைப்புப் பணி:நகராட்சித் தலைவர் ஆய்வு
விழுப்புரம் வடக்குத் தெருவில் சாலை சீரமைக்கும் பணியை நகராட்சி தலைவர் பாஸ்கரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
விழுப்புரம் வடக்குத் தெருவில், பாதாள சாக்கடை அமைக்கும் பணி சில
மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சாலையை சீரமைத்து
சிமெண்ட் சாலை அமைக்க ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று
வருகின்றன.
இப் பணிகளை நகராட்சித் தலைவர் பாஸ்கர் ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர்
ராஜேந்திரன், பொறியாளர் பார்த்தீபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.