தினமலர் 18.08.2010
சிங்கம்புணரிக்கு காவிரி குடிநீர்
திருப்புத்தூர்:சிங்கம்புணரி பேரூராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப் படும்,” என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: நெற்குப்பை, திருப்புத் தூர் பேரூராட்சிகளுக்கு கடந்த ஆண்டிலேயே காவிரி குடிநீர் திட்டம் செயல் படுத்தப்பட்டது. சிங்கம்புணரிக்கும் காவிரி குடிநீர் வழங்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது, முதல்வர் அறிவித்துள்ள ஐந்து கூட்டு குடிநீர் திட்டங்களில், சிங்கம்புணரி பேரூராட்சியும் சேர்க்கப்பட்டுள் ளது. 784 கோடி ரூபாயில், இத்திட்டம் செயல்படுத்தப்படும்.இதன் மூலம் நீண்ட கால பிரச்னை நீங்கும். இத்திட்டத்திற்குஅனுமதி அளித்த முதல்வருக்கு, நன்றி என்றார்.