தினகரன் 01.06.2010
சிதம்பரம் நகரில் தண்ணீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் நகர்மன்ற தலைவர் தகவல்
சிதம்பரம், ஜூன் 1: சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் பவுஜியாபேகம் தலைமையில் நடந்தது. ஆணையாளர் (பொறுப்பு) மாரியப்பன்முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முகமதுஜியாவுதீன் பேசுகையில், நகரில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. ஒரு வேளை கூட தண்ணீர் ஒழுங்காக வருவதில்லை. மீட்டிங் போட்டு பேசுகி றோம்.
ஆனால் எந்த பணி களும் நடக்கவில்லை. நகரில் வெறிநாய்கள் அதிக மாக உள்ளது, என்றார்.
தலைவர் பேசும்போது, கோடைக்காலம் என்பதால் தண்ணீர் பிரச்னை உள்ளது. அதுவும் விரைவில் சரி செய்யப்படும், என்றார்.
அமுதவள்ளி பேசுகை யில், எனது வார்டில் சாலை போடவேண்டும் என பல முறை கேட்டேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார். ஜேம்ஸ்விஜய ராகவன் பேசும்போது, தண்ணீர் பற்றாக்குறை பற்றியும், தண்ணீரை, தொட்டியில் தேக்குவது குறித்தும், அதை கண் காணிப்பது பற்றியும் கடந்த கூட்டத்தில் பேசி னேன். அதுபற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், என்றார்.
ஆணையாளர் பேசும் போது, தண்ணீர் தொட் 1397904493 யில் ஏற்றுவதை கண் காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
ராணி பேசுகையில், எனது வார்டு நகராட்சி யில் இருக்கிறதா, இல்லையா என்பது தெரிய வில்லை. எந்த பணிகளும் எனது வார்டில் நடைபெற வில்லை, என்றார். சாந்திபிரியதர்ஷினி பேசும் போது, எனது வார்டில் இலவச கலர் டிவியும் வழங்கவில்லை. எரிவாயு அடுப்பும் வழங்கவில்லை,என்றார்.
அப்புசந்திரசேகரன் பேசுகையில், குடிநீர் ஒருவேளைதான் வழங்கப்படுகிறது. அதுவும் சாக்கடை கலந்த நீராக வருகிறது, என்றார். ரமேஷ் பேசும் போது, பின்தங்கிய பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட மானிய நிதிமூலம் பல வார்டுகளில் பணிகள் நடக்கிறது.
ஆனால் எனது வார்டில் நான் இரண்டு ஆண்டுகளாக கேட்கும் பணிகள் எதுவும் நடக்கவில்லை, என்றார். தலைவர் பேசும் போது, அடுத்து வரும் நிதியில் உங்களது வார்டில் பணிகள் துவங்கப்படும், என்றார்.