தினகரன் 16.08.2010
சின்னமனூர் நகராட்சியில் கமிஷனர் காலி பணியிடத்தை நிரப்ப பொதுமக்கள் வலியுறுத்தல்
சின்னமனு£ர், ஆக. 16: சின்னமனு£ர் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், காலியாக உள்ள நகராட்சி கமிஷனர் பணியிடத்தை நிரப்ப பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சின்னமனு£ர் நகராட்சியில் 27வார்டுகள் உள்ளன. சுமார் 60ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி கமிஷனராக இருந்த பக்கிரிசாமி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு நகராட்சி கமிஷனர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. கமிஷனர் இல்லாததால், எந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, எந்த பணிகளுக்கு நிதி ஒதுக்குவது என்று தெரியாமல் திணறும் நிலை உள்ளது. இதனால் மக்களுக்கான வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே நகராட்சி கமிஷனர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.