தினமணி 07.01.2010
சிமென்ட் சாலை அமைக்க பூஜை
புதுச்சேரி, ஜன.6: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் இத் தொகுதி எம்எல்ஏ எஸ்.பி. சிவக்குமார் கலந்து கொண்டார்.
பாரதி வீதி– லூயிபிரகாசம் வீதியில் ரூ.10.5 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. செயின்ட்தெரேஸ் வீதி–மிஷன் வீதியில் ரூ.12.7 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படுகிறது.
பிரான்சுவா மார்த்தேன் வீதி– தெபேசான் தி ரீச்மோன்ட் வீதி ரூ.12.2 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படுகிறது. நகராட்சி கவுன்சிலர்கள் ராஜன், பிரான்சினா ரமணி, இந்திரா சோமானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.