தினமணி 23.09.2010
சிறந்த மாநகராட்சிக்கான ஸ்காச் விருது: சென்னை மேயர் பெற்றார்
இணையதளம் மூலம் பொது மக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதற்காக
, சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட ஸ்காச் விருதை தில்லியில் புதன்கிழமசென்னை, செப். 22: பொது மக்களின் குறைகளை சிறந்த முறையில் தீர்வு காண்பதற்காக வழங்கப்படும் ஸ்காச் விருதை சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை பெற்றுக் கொண்டார்.
இதற்கான விழா தில்லியில் நடைபெற்றது. மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.ஜெயபால் ரெட்டி இந்த விருதினை வழங்கினார். விருது பெற்றதைத் தொடர்ந்து
செய்தியாளர்களிடம் மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:
இணையதளம் மூலம் மக்களின் குறைகளைத் தீர்வு செய்யும் வகையிலான திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம், சொத்துவரி செலுத்துதல், சொத்து வரி தொடர்பான நினைவூட்டல் பெறுதல், பிறப்பு–இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் வருகைகள் குறித்து இணையதளம் மூலம் பெற்றோர்கள் அறிந்து கொள்ளுதல், கட்டட அனுமதி இணையதளம் மூலம் சமர்ப்பித்தல், தெருவிளக்கு தொடர்பான புகார்கள் சரி செய்தல் போன்ற பல்வேறு பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
இணையதளம் மூலம் சுமார் 30 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு, அதில் 28 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பான இணையதள பணிகளுக்காக ஸ்காச் விருது வழங்கப்பட்டுள்ளது என்றார் மேயர் மா.சுப்பிரமணியன். விருது நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி உடனிருந்தார்.