தினகரன் 18.10.2010
சிவகங்கை மாவட்டத்தில் காலாவதி உணவு பொருட்கள் அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை, அக். 18: சிவகங்கை மாவட்டத்தில் காலாவதியான உணவுப்பொருட்கள் குறித்து உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி
, தேவகோட்டை, சிவகங்கை ஆகிய 3 நகராட்சிகளிலும், மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட 12 பேரூராட்சிகளிலும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூட்டாக சேர்ந்த ஆய்வு செய்தனர்.ஆய்வு செய்ததில் உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்த கலப்பட உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன
. இனிவரும் காலங்களில் பாதுகாப்பான உணவு பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.