சிவகாசியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
சிவகாசியில் கடந்த புதன்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
சிவகாசி என்.ஆர்.கே.ஆர். வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைக்காரர்கள் நடைபாதை வரை பொருள்களை வைத்து ஆக்கிரமித்திருந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடும்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றிய மறுநாளே என்.ஆர்.கே.ஆர். வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பண்டல்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆகவே நகராட்சி நிர்வாகம் தொடந்து கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். அதேபோல, கடந்த மாதம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.