தினகரன் 04.09.2010
சீருடை வழங்கப்பட்ட பேரூராட்சி ஊழியர்களுக்கு சலவைப்படி வழங்க வேண்டும் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
அருமனை செப்
.4: சீருடை வழங்கப்பட்ட பேரூராட்சி ஊழியர்களுக்கு சலவைப்படி வழங்க வேண்டும் என்று பேரூ ராட்சி ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க குமரி மாவட்ட செயற்குழு கூட் டம் தக்கலை அரசு ஊழி யர் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கன கராஜ் தலைமையில் நடந் தது
.கூட்டத்தில்
, பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரியும் கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், குடிநீர் பராமரிப்போர், துப்புரவு பணியர்கள் ஆகியோரை வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் ஈர்த்துக் கொள்ள அரசையும் சம்பந்தப்பட்ட துறைகளை வலியுறுத்தியும் சீருடை வழங்கப்பட்ட பணியாளர் களுக்கு சலவைப்படி வழங்க கலெக்டரை கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில்
, மாவட்ட செயலாளர் ரிச்சர்டு ஹென்றி, துணைத்தலைவர் ரெஜி, ஜெயகுமார், புஷ்பராஜ், கணியான், இணைச் செயலாளர்கள் வினுகுமார், ராம கிருஷ்ணன் பொருளாளர் ஹரிகுமாரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.