தினமலர் 07.08.2012
சுகாதாரத்துறை ஆய்வு
கன்னிவாடி:கன்னிவாடி பேரூராட்சி பகுதியில், வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்க்கரசி தலைமையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பொது இடங்களில் புகை பிடிப்பது குறித்த, அறிவிப்பு இல்லாத நான்கு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் குருநாதன், கோபாலகிருஷ்ணன் குழுவினர், பொது இடங்களில் புகை பிடித்த 18 பேரிடம் அபராதம் வசூலித்தனர்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஓட்டல், டீக்கடைகளில் உணவின் தரம், பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீதான நடவடிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வாரம் இருமுறை ஆய்வு நடத்தப்படும். கோயில், பள்ளி வளாகங்களின் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.