தினமணி 05.03.2013
சுகாதாரப் பணி:ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க முடிவு
பல்லடம் நகராட்சியில் பொது சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள 87 பேரை ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதார பிரிவுக்கு போதிய நிரந்தர பணியாளர்கள் இல்லாததால், ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி பணியாளர்கள் நியமிக்க பல்லடம் நகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.175-ம், கனரக வாகன ஒட்டுநர்களுக்கு தினக்கூலியாக ரூ.245-ம் வழங்கப்பட உள்ளது.
80 துப்புரவு பணியாளர்கள், 7 கனரக வாகன ஒட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு பொது நிதியில் இருந்து ரூ.56 லட்சம் சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.