சுகாதாரப் பணி: மேயர்கள் ஆய்வு
வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளின் மேயர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார்கள்.
வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட படேல் நகர் சட்டப் பேரவைத் தொகுதியின் வார்டுகளில் மேயர் ஆசாத் சிங், துணை மேயர் பூர்ணிமா வித்யாத்ரி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, படேல் நகர் பகுதியில் கழிவு நீர்க் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பல்ஜீத் நகரில் சமுக நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
தெற்கு தில்லி மாநகராட்சியில் சங்கம் விஹாரில் உள்ள அங்கீகாரமற்ற காலனியில் தெற்கு தில்லி மேயர் சரிதா சௌத்ரி ஆய்வு நடத்தி அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, சுகாதார நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, அங்கீகாரமற்ற சங்கம் விஹார் காலனியில் சுகாதார நடிவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.