தினமலர் 05.05.2010
சுகாதாரமற்ற உணவு தடை செய்ய வலியுறுத்தல்
மதுரை: ” சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தடை செய்ய வேண்டும்,” என, கவுன்சிலர் சுப்புராம் மாநகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை வைத்துள்ளார். மனுவில் மேலும் அவர் கூறியுள்ளதாவது:சுகாதார அலுவலர்கள் உணவு விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கடைகளை தடை செய்ய வேண்டும்.வீடுகளுக்கு கொடுக்கும் தண்ணீர் கேன், பாக்கெட், பாட்டில்களுக்கு ஐ.எஸ்.ஐ முத்திரை இருக்கின்றனவா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.