தினமலர்
சுகாதார வளாகம் திறப்பு விழா
தா.பேட்டை: திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாக கட்டிடம் திறப்பு விழா நடந்தது.தா.பேட்டை டவுன் பஞ்சாயத்து 12வது வார்டு மேலத்தெருவில் தொட்டியம் சட்டசபைத் தொகுதி வளர்ச்சி நிதி மூன்று லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்தை கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் குடிநீர் மற்றும் சுகாதார நலச்சங்கம் (அவாஸ்) உறுப்பினர்கள் பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது. கிராமாலயா தொகுதி ஒருங்கிணைப்பாளர் பழனியாண்டி, தொழில்நுட்ப அலுவலர் ராஜேஷ், பகுதி ஒருங்கிணைப்பாளர் ராணி, குடிநீர் நலச்சங்க செயலாளர் அய்யப்பன், குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர்.