தினமணி 12.07.2013
தினமணி 12.07.2013
சுகாதார விழிப்புணர்வுப் பேரணி
பேரூராட்சி நிர்வாகம், சுற்றுலாத் துறை சார்பில் திருச்செந்தூரில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு, பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். நெல்லை
மண்டல சுற்றுலாத் துறை அலுவலர் சிவ.மாலையா, பேரூராட்சி செயல் அலுவலர்
கொ.ராஜையா, திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
பேரணியை, திருச்செந்தூர் கோட்டாட்சியர் ப.கொங்கன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக சுற்றுலாத் துறை மூலம் பேரூராட்சிக்கு 12 நவீன குப்பைத்தொட்டிகள்
வழங்கப்பட்டன.
திருச்செந்தூர் வட்டாட்சியர் ப.நல்லசிவன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜன்,
வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) வேலுமயில், நகர பேரூராட்சி துணைத்
தலைவர் தொ.ராஜநளா, பேரூராட்சி உறுப்பினர்கள் அ.சண்முகசுந்தரம்,
மு.காளிதாஸ், செ.இசக்கியம்மாள், சி.சங்கர், செ.சாந்தி, பாஸ்டீன்,
மு.சுப்புலெட்சுமி, க.மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் கு.பூவையா, பேரூராட்சி
பணியாளர்கள் ஜோதிபாசு, பரமசிவன், மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.