செங்கத்தில் நாய்களுக்கு கருத்தடை
செங்கம் பேரூராட்சிப் பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களுக்கு திங்கள்கிழமை கருத்தடை செய்யப்பட்டது.
செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட 18-வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை அதிகாமாக இருந்து வந்தது. இதனால் இந்த நாய்களை பிடித்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில், செங்கம் துக்காப்பேட்டை, புதிய பஸ்நிலையம், சந்தைமேடு, பஜார் வீதி, ராஜ வீதி, பெருமாள் கோயில் தெரு, மில்லத் நகர், தளவாநாய்க்கன்பேட்டை ஆகிய பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களை பேரூராட்சிப் பணியாளர் பிடித்து கருத்தடை செய்தனர்.
மேலும் தொடர்ந்து நாய்கள் பிடிக்கும் பணி நடைபெறும் என்றும், சொந்த நாய் வைத்திருப்பவர்கள் பேரூராட்சியில் தடுப்பூசி போட்ட சான்றுகளை காட்டி உரிமம் பெறவேண்டுமெனவும் செயல் அலுவலர் தெரிவித்தார்.