தினமணி 2.12.2009
செங்கோட்டையில் குடிநீர்த் தொட்டிகள் பயன்பாட்டிற்கு அளிப்பு
தென்காசி,டிச.1: செங்கோட்டையில் எம்எல்ஏ உள்ளூர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் 10 நீர்óத்தேக்கத் தொட்டிகள் திறப்பு விழா நடைபெற்றது.
செங்கோட்டை 9 வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் எஸ்.எம்.ரஹீம் குடிநீர்த் தேக்க தொட்டிகளை திறந்துவைத்தார். நகராட்சி ஆணையர் ராமகிருஷ்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் ஆதிமூலம், நகர்மன்ற உறுப்பினர் முகம்மது முஸ்தபா, காளியம்மாள், ரவீந்திரன், சுமதி, பத்மாவதி,செல்வகுமாரி, ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.