தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
செஞ்சி கண்ணகி நகரில் பூங்கா: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
செஞ்சி கண்ணகி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில்
பூங்கா அமைப்பது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற செஞ்சி பேரூராட்சி
மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் செஞ்சி பேரூராட்சி தலைவர்
செஞ்சிமஸ்தான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல்
அலுவலர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் இ.சங்கர் உள்ளிட்ட
கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், செஞ்சி கண்ணகி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா
அமைப்பது, நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பேரூராட்சிக்கு
சொந்தமான ஏரி, குளம் மற்றும் ஊரணிகளை தூர்வாருவது, காமாட்சி அம்மன் திருமண
மண்டபத்தெருவில் ரூ.36 லட்சத்திலும், எல்.டி.பேங்க் தெருவில் ரூ.70
லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைப்பது. ஜாபர் பேக் தெருவில் உள்ள கிணற்றை
தூர்வாரி மின் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் அமைப்பது, பூவாத்தம்மன்,
செல்லியம்மன் ஆலயத்திற்கு செல்ல மாற்று ஏற்பாடு செய்து தருமாறு செஞ்சி
வட்டாட்சியரை கேட்டுக்கொள்வது,
செஞ்சி பி.ஏரிக்கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி
வழக்குரைஞர் சக்திராஜன் அளித்துள்ள மனு குறித்து ஆய்வு செய்ததில் பி.ஏரி
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இது குறித்து
ஊராட்சி ஒன்றியத்திற்கு தகவல் அளிப்பது, பி.ஏரிக்கரையின் உள்ளே
நீர்பிடிப்பு பகுதியில் வீடு கட்டி வசிப்போரிடம் வீட்டு வரி இனி வசூல்
செய்வது இல்லை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.