தினகரன் 02.02.2011
சென்னிமலை பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்
சென்னிமலை, பிப். 2:
சென்னிமலை பேரூராட்சி பகுதியில் உள்ள 3428 வீடுகளுக்கு பொன்விழா கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய காவிரி குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கியுள்ளது. புதிய காவிரி குடிநீர் இணைப்புகளின் விண்ணப்பங்கள் வழங்கும் விழா இன்று (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
விழாவிற்கு விடியல் சேகர் எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார்.
பேரூராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். எம்.பிக்கள் கே.வி.ராமலிங்கம், அ.கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில், ஈரோடு கலெக் டர் சவுண்டையா முதல் குடிநீர் இணைப்புக்கான அனுமதி படிவத்தை சென்னிமலை சுப்பிரமணியசாமி கோயிலுக்கு வழங்குகிறார்.