தினமணி 6.11.2009
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சென்னை, நவ. 5: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துள்ளதை அடுத்து, இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த ஏரிகளில் வியாழக்கிழமை நிலவரப்படி முறையே நீர்மட்டம், இருப்பு, நீர் வரத்து, மழையளவு விவரம்:
பூண்டி– 132.16 அடி. 1170 மில்லியன் கன அடி. 628 கன அடி. 30 மில்லி மீட்டர்.
சோழவரம்– 52.64 அடி, 232 மி.க.அடி, 197 கன அடி. 70 மி.மீட்டர்.
செங்குன்றம்– 37.95 அடி. 1120 மி.க.அடி, 347 கன அடி. 49 மி.மீட்டர்.
செம்பரம்பாக்கம்– 71.20 அடி, 724 மி.க.அடி, 1620 கன அடி. 125 மி.மீட்டர்.
கடந்த ஆண்டு இதே நாளில்…கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அன்று இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 6048 மில்லியன் கன அடியாக இருந்தது. ஆனால், இப்போது மொத்த நீர் இருப்பு 3,246 மில்லியன் கன அடியாக உள்ளது.