தினமணி 16.11.2009
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு
சென்னை, நவ. 15: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்திழமை பலத்த மழை பெய்துள்ளதை அடுத்து, இந்த ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி முறையே தற்போதைய நீர் மட்டம் (கொள்ளளவு), இருப்பு, நீர் வரத்து (விநாடிக்கு) விவரம்:
பூண்டி– 134.22 அடி (140), 1,565 மில்லியன் க.அடி. 141 கன அடி.
சோழவரம்– 58.23 அடி (64.50), 479 மி.க.அடி, 114 கன அடி.
செங்குன்றம்– 41.25 அடி (50.20), 1,591.28 மி.க.அடி, 50 கன அடி.
செம்பரம்பாக்கம்– 76.10 அடி (85.40), 1,476 மி.க.அடி.
கடந்த ஆண்டு இதே நாளில்…2008 நவம்பர் 15-ம் தேதி அன்று இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 6,209 மில்லியன் கன அடியாக இருந்தது. தற்போது மொத்த நீர் இருப்பு 5,112.68 மில்லியன் கன அடியாக உள்ளது.