தினமணி 02.08.2010
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
சென்னை, ஆக. 1: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்த அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
முக்கிய ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி முறையே நீர்மட்டம், நீர் இருப்பு, நீர்வரத்து உள்ளிட்ட விவரங்கள்:
பூண்டி 131.70 அடி, 1,095 மி.க.அடி, வினாடிக்கு 257 க.அடி. சோழவரம் 50.07 அடி, 145 மி.க.அடி, வினாடிக்கு 58 க.அடி. புழல் (செங்குன்றம்) 39.79 அடி, 1,374 மி.க.அடி, வினாடிக்கு 239 க.அடி. செம்பரம்பாக்கம் 77.12 அடி, 1,666 மி.க. அடி, வினாடிக்கு 105 க.அடி.
இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையளவு (மில்லி மீட்டரில்): பூண்டி– 23, சோழவரம் 80, புழல் 49, செம்பரம்பாக்கம் 13.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஞாயிற்றுக்கிழமை மொத்த நீர் இருப்பு 4,280 மி.க. அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 3,685 மி.க.அடியாக இருந்தது