தினமலர் 15.04.2010
சென்னையில் காலரா இல்லை : மேயர் தகவல்
தண்டையார்பேட்டை : ‘சென்னையில் காலரா பரவவில்லை‘ என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகர் மற்றும் மண்டலம்– 2ல் உள்ள ஆசீர்வாதபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளதா என ஆய்வு செய்து, தற்காப்பிற்காக குளோரின் மாத்திரைகள் மற்றும் உப்பு, சர்க்கரை கரைசல் பாக்கெட்டுக் களை மேயர் சுப்ரமணியன் நேற்று வழங்கினார்.அதன்பின், மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:சாலை ஓரங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீர் பாக் கெட்டுக்களால், வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப் புள்ளது.சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, 165 மருத்துவமனைகள் மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மாதவரம், புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகளும், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில், 175 பேர் வயிற்று போக்கினால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.மழைக்காலத்திலும், கடும்வெயில் காலத்திலும் தொற்று நோய் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது வழக்கமான ஒன்று. எனவே, இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னை நகரில் காலரா இல்லை.இவ்வாறு மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மண்டல குழு தலைவர் டன்லப் ரவி, மன்ற உறுப்பினர்கள் சாமி, லதா, சுகாதார அலுவலர் குகானந்தம், தொற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் லட்சுமிதேவி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.