மாலை மலர் 29.10.2010
சென்னை– புறநகரில் மழை: ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் உயருகிறது
சென்னை, அக். 29- கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 832 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை அளவு 15 மில்லி மீட்டர், தண் ணீர் இருப்பு 1682 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த அளவு 1220 மில்லியன் கன அடி.
புழல் ஏரி பகுதியில் 60 மி.மீ மழை பெய்துள்ளது. ஏரிக்கு 712 கன அடி தண்ணீர் வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 1040 மில்லியன் கனஅடி. இன்றைய அளவு 1408 மில்லியன் கன அடி.
செம்பரம்பாக்கம் பகுதியில் பெய்த மழை அளவு 72 மி.மீ. ஏரிக்கு தண்ணீரின் வரத்து 556 கன அடி. ஏரியின் நீர் இருப்பு 1506 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த தண்ணீர் 480 மில்லியன் கன அடி.
சோழவரம் ஏரியில் 409 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 12 கன அடி தண்ணீர் வருகிறது. மழை அளவு 45 மி.மீ. கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 197 மில்லியன் கன அடி.
வீராணம் பகுதியில் 56 மில்லி மீட்டர் மழை பெய் துள்ளது. ஏரிக்கு 400 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் நீர் இருப்பு 605 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த அளவு 409 மில்லியன் கன அடி
சென்னை நகரில் குழாய் மூலம் தினமும் 660 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.