தினத்தந்தி 16.08.2013
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சுதந்திரதின விழா மேயர் சைதை துரைசாமி தேசிய கொடி ஏற்றினார்

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சுதந்திர தினவிழா
கொண்டாடப்பட்டது. சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி தேசிய கொடி ஏற்றி
வைத்து பள்ளி மாணவ–மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை
நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவ–மாணவிகளுக்கும், அணிவகுப்பில்
கலந்து கொண்ட தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கும், பள்ளி
சாரண–சாரணியர்களுக்கும் மேயர் சைதை துரைசாமி பரிசுகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, சுவர்ண ஜெயந்தி நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்
ரூ.2 லட்சம் வீதம், 6 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான காசோலைகளை
வழங்கினார். மேலும் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 34
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை மேயர்
பா.பெஞ்சமின் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும்
மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.