தினகரன் 05.01.2011
செப்டிக் டேங்க் பராமரிப்பு விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதை கலெக்டர் சவுண்டையா கொடியசைத்து
துவக்கி வைத்தார். அருகில், மேயர் குமார் முருகேஷ் உள்ளிட்டோர்.
ஈரோடு, ஜன. 5:
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப் புகள், வியாபார நிறுவனங் கள்,மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் உள்ள கழிவுநீர் செப்டிக்டேங்க் தொட்டி களை சுத்தம் செய்வதற்கு ஆட் களை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. எனவே கழிவுநீர் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்கள் தகுந்த பணி அனுபவம் பெற்றுள்ளவராக வும், அவருக்கு போதிய பாது காப்பு கவசங்கள் வழங்கி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இப்பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முறை யாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனு மதி மற்றும் தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும்.
சேமிக்கப்பட்ட கழிவு களை நீர்படுகைகள், பொது வடிகால்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பின்றியும், சுற்றுச்சூழல் மாசுபடாமலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் வெளியேற்றப்பட வேண்டும். கழிவுகளை அகற் றும் பணியை துவக்குவதற்கு முன்பு மாநகராட்சியில் முறை யான அனுமதி பெற வேண் டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. செப்டிக் டேங்க் சுத்தம் செய்வது தொடர் பான விழிப்புணர்வை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி சார்பில் நேற்று பேரணி நடந் தது. மாநகர மேயர் குமார்முருகேஷ், மாநகராட்சி ஆணையர் பாலசந்திரன் முன்னிலை வகித்தனர்.
பேரணியை மாவட்ட ஆட்சியர் சவுண்டையா துவ க்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது, ஈரோடு மாநகராட்சியில் ரூ.209 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 கட்ட மாக பணிகள் செய்ய திட்டமிட்டு தற்போது இரண்டு கட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வரும் 2013ம் ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவு பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும், என்று தெரிவித்தார்.
பேரணியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயபாஸ்கர், சண்முகம், மாநகராட்சி பொறி யாளர் வடிவேல், உதவி பொறியாளர் ஆறுமுகம், மா நகர் நல அலுவலர் ரமேஷ்குமார், நகரமைப்பு அலுவலர் சதாசிவம், துப்புறவு ஆய்வா ளர் பூபாலன், விஏஓ. அழகு ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகளும், மகளிர் சுய உதவிக்குழுவினரும், உணவு கழிவுகளை கழிவறையில் போடவும், சிகரெட், பீடித்துண்டுகள், தீக்குச்சிகள், பயன்படுத்திய டாய்லெட் ரோல்கள், சானி டரி நாப்கின்கள், பேனாக்கள், ரீபில்கள் மற்றும் நூல், குழந்தைகளின் விளையாட்டு சாமான்கள் போன்றவற்றை கழிவறையில் போடுவதை தடுக்கும் தட்டிகள், பேனர் களை கையில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். பேரணி பிரப் ரோடு வழி யாக அரசு மருத்துவமனை யில் நிறைவு பெற்றது.