செயல்பாடு நாளை நிறுத்தம் கழிவுநீர் அகற்றுவதற்கு போன் செய்யலாம்
சென்னை: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
எனவே, இது தொடர்புடைய பகுதி – 4ல் உள்ள மேல்பட்டடை, வியாசர்பாடி, மகாகவி பாரதிநகர், தாமோதர் நகர் மற்றும் பகுதி – 5ல் உள்ள நேப்பியர் பூங்கா, வால்டாக்ஸ் ரோடு, சைடன் ஹாம்ஸ் ரோடு, பகுதி- 6ல் பெரம்பூர், ஏகாங்கிபுரம், செம்பியம், பெரியார் நகர், ஜவஹர் நகர், திம்மசாமி தர்கா, புரசைவாக்கம், பகுதி-8ல் அயனாவரம் ஆகிய கழிவு நீரேற்று நிலையங்களின் செயல்பாடு நாளை நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த பணி நாளை இரவு 10 முதல் அடுத்த நாள் நண்பகல் 12 மணி வரை நடக்கிறது. அந்த சமயத்தில் ஆள் நுழைவாயில்களில் இருந்து வழிந்தோடும் கழிவுநீரை, கழிவுநீர் லாரிகள் மூலம் தற்காலிகமாக அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு பகுதி பொறியாளர் 4- 81449 30904, பகுதி பொறியாளர் 5- 81449 30905, பகுதி பொறி யாளர் 6- 81449 30906, பகுதி பொறியாளர் 8- 81449 30908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.