தினமணி 31.07.2012
சேத்தூரில் சுகாதார வளாகம் திறப்பு
ராஜபாளையம், ஜூலை 30: சேத்தூர் பேரூராட்சியில் 11, 12-வது வார்டு பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
சேத்தூர் பேரூராட்சித் தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பிரமணியம், நிர்வாக அதிகாரி முருகன், பொறியாளர் கலைஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதார வளாகக் கட்டடத்தை ராஜபாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.கோபால்சாமி திறந்து வைத்துப் பேசினார். சேத்தூர் அ.தி.மு.க. செயலாளர் செல்வக்குமார், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.