தினமணி 10.07.2013
தினமணி 10.07.2013
சேலத்தில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
: சேலம் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீர் விநியோகம்
செய்யும் பிரதான குழாயில் பழுது ஏற்பட்டிருப்பதால், புதன்,
வியாழக்கிழமைகளில் (ஜூலை 10, 11) குடிநீர் விநியோகம் இருக்காது என்று
மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதானக் குழாயில்
குரங்குசாவடி அருகே கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீருடன் மாசு கலக்கும்
நிலை உருவாகியுள்ளது. எனவே, கசிவை அடைத்து, சரி செய்யும் பணியில்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புதன், வியாழக்கிழமைகளில் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட மாட்டாது.
எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையர் மா.அசோகன் கேடுக்கொண்டார்.