தினகரன் 05.02.2010
சேலம் மாநகராட்சியில் ஒரு கோடி ரூபாயில் பணிகள் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
சேலம் : சேலம் மாநகராட்சியின் பல்வேறு கோட்டங்களில் ரூ.1கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை வீரபாண்டி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
சேலம் 2வது சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாநகராட்சியின் திட்டப் பணிகளுக்கு ரூ.1கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பல்வேறு கோட்டங்களுக்கான திட்டப்பணிகள் நேற்று துவக்கப்பட்டது.
4வது கோட்டம் நியூபேர்லேண்ட்ஸ், 5வது கோட்டம் கிரீன்வேஸ் சாலை, அர்ஜூணா நகர், கேம்எஸ் கார்டன், 7வது கோட்டம் ஆத்துக்காடு, 6வது கோட்டம் பொன்நகர், கேகே நகர், 8வது கோட்டம் குருக்கள் காலனி, 12வது கோட்டம் மணக்காடு, 14வது கோட்டம் செரிரோடு, 15வது கோட்டம் ராஜாஜிசாலை, 30வது கோட்டம் நாராயணன் தெரு, தாண்டான்தெரு உட்பட பல்வேறு இடங்களில் தார்சாலை அமைத்தல், வடி கால் அமைத்தல், ஆள்துளை கிணறு அமைத்தல் போன்ற பணிகளை வீரபாண்டி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
இதே போல் மணக்காடு காமராஜர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.16லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடம், ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் போன்றவற்றையும் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மேயர் ரேகாபிரியதர்ஷினி, ஆணையாளர் பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர் அசோகன், கவுன்சிலர்கள் தனசேகரன், தினகரன், செயற்பொறியாளர் அசோகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.