தினத்தந்தி 30.08.2013
சேலம் மாநகராட்சியில் மேயர் சவுண்டப்பன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள்
குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் எஸ்.சவுண்டப்பன் தலைமையில்
நடைபெற்றது. வார்டு எண் 54–ல் புதியதாக போடப்பட்டுள்ள குடிநீர் குழாயில்
வீட்டு இணைப்பு வழங்கக்கோருதல், வார்டு எண் 50– ல் சாக்கடை கால்வாய்
தூர்வார கோருதல், வார்டு எண் 45–ல் வரி நிலுவையை குறித்து கோருதல்,
ஆண்டிபட்டி பகுதி கான்கிரீட் சாலை, குடிநீர் வசதி மற்றும் போர்வெல் வசதி
செய்து தர கோருதல், துப்புரவு பணியாளர் மீது புகார், குடும்ப ஓய்வூதிய
பணப்பயன் வழங்க கோரல், வாரிசு வேலை வழங்க கோருதல், 2006–ல் பணியாற்றி
நிறுத்தப்பட்டவர்கள் மீண்டும் பணி வழங்க கோருதல் வேலைவாய்ப்பு மற்றும்
துப்புரவு பணியாளராக பணி வழங்க கோருதல் உட்பட 11 கோரிக்கை மனுக்களை பொது
மக்கள் மேயரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை
எடுத்திட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளர்
பாலசுப்ரமணியன், செயற்பொறியாளர்கள் காமராஜ் அசோகன், வெங்கடேஷ், உதவி
செயற்பொறியாளர்கள் எம்.ஆர்.சிபிச்சக்ரவர்த்தி மற்றும் அலுவலர்கள்,
கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.