தினமலர் 27.08.2010
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்
சேலம்: சேலம் மாநகராட்சியின் மாமன்ற கூடத்தில் இயல்புக் கூட்டம் நடைபெற உள்ளது.இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:சேலம் மேயர் ரேகாபிரியதர்ஷினி தலைமையில் வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு மாமன்ற கூடத்தில் இயல்புக் கூட்டம் நடைபெறுகிறது.
மேட்டூர், ஓமலூர் பகுதியில் பலத்த மழை 15 ஏரிகளில் நிரம்பியது ஒன்றே ஒன்று.மேட்டூர்: மேட்டூர், கொளத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 42 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட தும்பல் காட்டு பள்ளம் ஏரி, 21 மி.கனஅடி கொள்ளளவு செம்மலை சிவிலிகரடு ஏரி, 20 மி.கனஅடி கொள்ளளவு கொத்தனேரி, 18.7 மி.கனஅடி கொள்ளளவு பி.என்.பட்டி ஏரி, 30 மி.கனஅடி கொள்ளளவு மதுரகாளியம்மன் கோயில் ஏரி ஆகியவை உள்ளது.
ஓமலூர் பகுதியில் 42 மி.கனஅடி வடமனேரி, 11.4 மி.கனஅடி நாச்சியம்பட்டி ஏரி, 11.30 மி.கனஅடி குண்டக்கல் ஏரி, 6.3 மி.கனஅடி பண்ணப்பட்டி ஏரி, 13 மி.கனஅடி தாச சமுத்திரம் ஏரி, 15.4 மி.கனஅடி கோடுபள்ளம் ஏரி, 6.18 மி.கனஅடி பெரிய சக்களச்சி ஏரி, 4.8 மி.கனஅடி பொம்மியம்பட்டி ஏரி, 16.4 மி.கனஅடி கோட்ட குள்ளமுடையான் ஏரி, 10.3 மி.கனஅடி கே.மோரூர் ஏரி என 15 ஏரிகள் உள்ளது.கடந்த சில நாட்களாக மேட்டூர், ஓமலூர் பகுதியில் பலத்த மழை பெய்த போதிலும், சில ஏரிகளில் மட்டுமே நீர்வரத்து அதிகரித்தது. மழை காரணமாக கோட்டகுள்ளமுடையான் ஏரி முழுமையாக நிரம்பி விட்டது. பண்ணப்பட்டி, கோடுபள்ளம், பெரிய சக்களச்சி ஏரிகள் 25 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது. மற்ற ஏரிகள் எதுவும் நிரம்பாததால், சம்பந்தபட்ட ஏரி பாசன பகுதி விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.