தினமணி 11.03.2013
சொத்துவரி நிலுவை: என்டிஎம்சி அறிவிப்பு
புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்.டி.எம்.சி.) உள்பட்ட பகுதிகளில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்டிஎம்சி அறிவித்துள்ளது.
என்டிஎம்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “”பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாராகம்பா ரோடிலுள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மூன்று கட்டடங்களுக்கு ரூ. 10 கோடி சொத்துவரி நிலுவை உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து வரி நிலுவை செலுத்தப்படும்போது, 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று தெரிவித்தும் பதில் ஏதும் பெறப்படவில்லை” என்றார்.