தினமணி 25.09.2009
சொத்து வரி சிவகாசி நகராட்சி விளக்கம்
சிவகாசி ,செப். 24: சிவகாசி நகராட்சியில் 2008 – 2009-ம் ஆண்டிற்கான சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து சிவகாசி நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி. அசோகன் தெரிவித்துள்ளதாவது:
அரசாணைப் படி குடியிறுப்பு வீடுகளுக்கு 25 சத வரியும், தொழிற்சாலைக்கு 100 சத வரியும், வணிக உபயோகத்திற்கு 150 சத வரியும் உயர்த்த உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது நகர்மன்றம் குடியிறுப்பு வீடுகளுக்கு 20 சதமும், தொழிற்சாலைகளுக்கு 75 சதமும், வணிக உபயோகத்திற்கு 100 சதமும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலர் வரி உயர்வு அதிகமாக உள்ளது என மேல் முறையீடு செய்துள்ளனர்.
இதற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளிலுள்ள வழிகாட்டுதலின் படி, கட்டடப் பரப்பளவு, தன்மை மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய இயலும் என தெரிவித்துள்ளார்.
எனவே நகர்மன்றத் தீர்மானம் செய்தபடி வரி வசூல் செய்யப்படும் என்றார்.
பொதுமக்கள் வரியைச் செலுத்தி, வளர்ச்சித் திட்டங்களான பாதாள சாக்கடை, எரி வாய்வு தகன மேடை, மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், மின் உற்பத்தி காற்றாலை, நகரை ஒளி மயமாக்குதல் உள்ளிட்டத் திட்டங்களை நிறைவேற்றிட ஒத்துழைப்புத் தர கேட்டுக் கொண்டார்.