தினமலர் 05.02.2010
சொத்து வரி செலுத்த ‘கெடு‘ ஆனைமலையில் எச்சரிக்கை
பொள்ளாச்சி:ஆனைமலை, ஒடையகுளத்தில் குடிநீர், சொத்து வரியை வரும் 15ம் தேதிக்குள் செலுத்தி தண்ணீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும்‘ என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை, ஒடையகுளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை மேம்பாடு மற்றும் குடிநீர் வினியோகம் போன்ற திட்டங்களை சீராக பராமரித்து, செயல்படுத்த வரி மிகவும் அவசியமாக உள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகைதாரர்களின் உரிம கட்டணம், கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நிலுவையின்றி பொதுமக்கள் செலுத்த வேண்டும். பிப்., 15ம் தேதிக்குள் வரியை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.