சொத்து வரி புத்தகம் வாங்க காலக்கெடு நீட்டிப்பு
கோவை, :மாநகராட்சி சொத்து வரி புத்தகம் வாங்க வரும் 25ம்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாநகராட்சியில் 2008க்கு முன்னர் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் காலியிடங்களுக்கு 2008&09 சொத்து வரி பொது சீராய்வின்போது புதிய சொத்து வரி கேட்பு புத்தகம் வழங்கப்பட்டது. இப்புத்தகத்தில், 2012&13ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரை வரி செலுத்த ஏதுவாக பக்கங்கள் இருந்தன. தற்போது, பக்கங்கள் தீர்ந்துவிட்ட நிலையில், பழைய புத்தகங்களுக்கு பதிலாக புதிய புத்தகங்கள் கடந்த 25.4.2013 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இப்புத்தகங்களை பெற காலநீட்டிப்பு செய்யவேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக் கை யை ஏற்று, வரும் 25.5.2013 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 2013&14ம் ஆண்டுக்கு சொத்து வரி செலுத்த, சொத்துவரி புத்தகத்தில் பக்கம் இல்லாத அனைவருக்கும் புதிய சொத்து வரி புத்தகம் வழங்கப்படும்.
அந்தந்த பகுதிகளில் உள் ள வரி வசூல் மையங்கள், வார் டு அலுவலகங்கள், மாந கராட்சி பள்ளிகளில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இப்புத்தகங்களை பெறலாம். பழைய புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு, புதிய புத்தகம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.